இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அநேகமுறை , நாம் ஏன் சுவிசேஷ ஊழியம் செய்ய வேண்டாம் என்பதற்காக சாக்குப்போக்குகளைக் கூறுகிறோம். அவருடைய வாழ்நாள் முழுவதும், நம்முடைய சாக்குப்போக்குகள் எவ்வளவு மோசமானவை என்பதை பவுலானவர் நமக்குக் காண்பிக்கிறார் ! தனக்கான தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்ற அவர் வைராக்கியத்துடன் உறுதியாக இருந்தார், மேலும் எந்த ஒரு காரியமும் அவைகளை தடைசெய்யாது என்றிருந்தார் (அப்போஸ்தலர் 20:24). லூக்கா ஆசிரியர், பவுல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு தன்னை தானே ஆதரிக்க வேண்டிய நிலையிலும் மற்றும் மற்ற சகோதர்களை சார்ந்திருக்க வேண்டுமென்று சொல்லி அப்போஸ்தலர் நடப்படிகள் புத்தகத்தை முடிக்கிறார் . இந்த அநேக பாடுகளின் மத்தியில் , அவர் இழந்துப் போனவர்களுக்காக சுவிஷேசத்தை பிரசங்கிக்கவும் அநேகருக்கு எடுத்துச் செல்லவும், அவரை பின்பற்றி வரும் மற்ற சகோதரர்களை வழிநடத்தவும், இன்னுமாய் இயேசுவுக்காய் வைராக்கியமாய் அவரால் வாழவும் முடிந்தது !

என்னுடைய ஜெபம்

அன்பும், சர்வவல்லமையுள்ள தேவனே , என் சாக்குபோக்குகளையும் என் பயத்தையும் மன்னியுங்கள். சுவிசேஷத்தில் உம் இரட்சிப்பின் சத்தியத்தை பகிர்ந்துகொள்ள என்னை தைரியப்படுத்துங்கள். என்னை அறிந்த அனைவரும் என் மூலமாக இயேசுவைப் பற்றி மேலும் அறிந்து கொள்வார்களாக! அவருடைய அருமையான நாமத்தின் மூலமாய் அடியேன் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து