இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"சகோதர சிநேகத்திலே மற்றொருவருடன் பட்சமாயிருங்கள் ". அப்படி இருப்பதற்கு நமது சபையில் இப்படி பேசவேண்டும் - நம் குடும்பம், நாம் சகோதர சகோதரிகள், நாம் தேவனுடைய பிள்ளைகள் - இவைகள் வெறும் வார்த்தைகளை விட அதிகமாக இருக்க வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் உள்ள காரியங்களை நன்றாய் அறிந்துக்கொள்ள வேண்டும், ஒருவரையொருவர் நன்றாய் புரிந்துக்கொண்டு , நாம் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, அவர்களை நேசித்து, ஊழியம் செய்து, அவர்களை ஆசீர்வதிக்கலாம். நம்முடைய உடன் பங்காளிகளாகிய கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் அதிகம் ஈடுபடுவதற்கு நீங்கள் சமீபத்தில் என்ன செய்தீர்கள்? மற்றவர்களிடம் பட்சமாய் இருப்பது என்பது ஒரு பொறுப்பை பின்பற்றுகிறது அது அவர்களால் தெரிந்துகொள்ளவும் அறியப்படவும் வேண்டும் !

என்னுடைய ஜெபம்

பிதாவே , அடியேனுக்கு ஒரு உலகளாவிய குடும்பத்தை வழங்கியதற்காக உமக்கு நன்றி. என்னை முற்றிலுமாய் நேசித்ததற்காக உமக்கு நன்றி. அப்பா, என்னையும், உம்முடைய குடும்பத்தில் ( சபையில் ) உள்ளவர்களிடம் எனது நேரத்தையும் இன்னும் வெளிப்படையாக இருக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். மற்றவர்களை ஆசீர்வதிக்கவும் இன்னுமாய் நீர் உம்முடைய பிள்ளைகளாக உண்டாக்கினவர்களிடமிருந்து ஆசீர்வதிக்கப்படுவதற்கும் வைராக்கியமுள்ள இருதயத்தை அடியேனுக்கு தாரும் . என் மூத்த சகோதரனாகிய இயேசுவின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து