இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் தேவனை எப்படி பார்க்கிறீர்கள்? அவர் மற்றவர்களை கொண்டு உங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்க வழி தேடுபவரா ? இந்த விஞ்ஞான உலகின் காரியங்களோடு அவர் தொடர்பு இல்லாத ஒரு வயதானவரா ? மனுஷர்களை குறித்ததான கவலையினால் தன்னைத்தானே கறைப்படுத்திக் கொள்ள அவர் மிகவும் பரிசுத்தமானவரா மற்றும் நமக்கான எல்லா காரியங்களுக்கான கிரியையை நடப்பிக்க நம்மிடமே விட்டுவிட்டாரா? இல்லை. இல்லை! ஆண்டவர் நாம் வாழ்கிறதான உலகத்திலே மனுஷனாய் வந்து மனுஷனுடைய எல்லா காரியங்களையும் உட்படுத்திக் கொள்ளும்படியாய் தேர்ந்தெடுத்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், ஆனால் நம் ஒவ்வொருவரையும் மீட்டுக்கொள்வதற்காக வந்தார் . தேவன் நம்மை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லை , நம்மை இரட்சிக்க விரும்புகிறார் என்பதற்கு இயேசு பெரிய நினைவூட்டல். தேவனுக்கு ஸ்தோத்திரம் ! ஆண்டவராகிய இயேசுவை நம்முடன் இருப்பதற்காக தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் !

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள மற்றும் பரலோகத்தின் தேவனே , உமது பிரசன்னத்திற்காக ஏங்கும் எங்களுடனும், மனந்திரும்புபவர்களுடன் நீங்கள் வாழ்வதற்காக உமக்கு நன்றி. நாங்கள் மனிதர்கள் மட்டுமே என்பது உமக்கு தெரியும், ஆனால் நீர் எங்களை நேசிக்கிறீர்கள். நாங்கள் பாவிகள் என்பதை நீர் அறிவீர், ஆனால் நீர் எங்களை மீட்டுக்கொண்டீர். நாங்கள் பரிபூரணமானவர்கள் அல்ல என்பதை நீர் அறிவீர், ஆனால் எங்களை இரட்சிக்க இயேசுவை உகந்த பலியாக அனுப்பினீர் . உமக்கு நன்றி. என் இரட்சகரின் மூலம் நான் எனது மனமார்ந்த நன்றியையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்துகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து