இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிருபை எவ்வளவு அவசியமானது ? தேவனுடைய கிருபை மற்றும் அந்த கிருபையைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வது நம் பிராணனை விட முக்கியமானது என்று பவுலானவர் கூறுகிறார் ! மெய்யாகவே , தேவனுடைய கிருபையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதே பவுலின் வாழ்க்கையின் ஊழியமாக இருந்தது. தேவன் அவருக்கு வழங்கிய ஊழியத்தை அவர் முடிக்கவில்லை என்றால் அவரது வாழ்க்கை அவருக்கு வெறுமையாகவும், பிரயோஜனமற்றதாய் இருக்கும் என்றும் எண்ணினார் . பவுலானவர் சிறைச்சாலையில் தனது மரணதண்டனைக்காக காத்திருந்தபோது, சந்தோஷத்தோடே ​​அவர் இவ்வாறு கூறினார் : "நான் நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார். ( 2 தீமோத்தேயு 4-7,8).. பவுலானவர் தனது முழு பெலனுடன் ஓட்டத்தை ஓடி முடித்து தனக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தை நிறைவேற்றினார். இப்போது நாமும் அதையே செய்வோமாக !

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , பரிசுத்த பிதாவே , இயேசுவை எனக்காக மரிக்க அனுப்பிய உமது மகத்தான கிருபைக்காக நன்றி. உம்முடைய பிள்ளையாக , உம் உடன்படிக்கையின் பலிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், என் ஜீவனையும், அன்பையும், இன்னுமாய் அடியேனை முற்றிலுமாய் உமக்கென்று ஒப்புவிக்கிறேன் . இயேசுவின் மூலமாகவும் அவருடைய நாமத்தின் வல்லமையினாலும் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து