இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அடையாளமாக, பிரதான ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் அனைவரின் நாமங்களையும் "தன் இருதயத்தில்" வைத்திருந்தனர் . நம்முடைய பிரதான ஆசாரியராகிய இயேசுவும் , நமக்காக சிலுவையில் மரிக்கச் சென்றபோது, ​​நம்முடைய பாவங்களை அவருடைய முதுகிலே சிலுவையாக சுமந்தார் , அவருடைய இருதயத்திலோ நம்முடைய மன்னிப்பைக் கொண்டிருந்தார்! இயேசுவே உலகம் முழுவதற்கும் தேவனுடைய இரட்சகராக இருக்கிறார், அவர் நம்மை தேவனிடம் கொண்டு சேர்க்க, நம்முடைய பாவங்களுக்காக ஒரேதரம் அவரை ஜீவ பலியாக ஒப்புவித்த நம்முடைய பிராதான ஆசாரியர் அவரே. (எபிரேயர் 7:23-27, 9:24-28, 10:8- 10)

என்னுடைய ஜெபம்

இரக்கமுள்ள நல்மேய்ப்பரே, என் பாவங்களிலிருந்து என்னை மீட்க நீர் செலுத்திய மாபெரிதான விலையின் காரணமாக நீர் அடியேனை எவ்வளவாய் நேசிக்கிறீர் என்பதை நான் அறிவேன். சில சமயங்களில் என்னுடைய விசுவாசமற்ற மற்றும் துரோகமான வழிகளை மன்னித்து உம் இருதயத்தில் என்னை வைத்திருப்பதற்காக உமக்கு நன்றி. உம் தியாகத்திற்கு நன்றி. என் பாவங்களுக்காக ஒருமுறை தன்னையே தியாகம் செய்த உமது குமாரனாகிய இயேசுவே நாமத்திலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து