இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"கிருபையை " என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. எப்பொழுதும் அன்பான காரியத்தைச் செய்ய, ஒழுக்கம் அல்லது வெகுமதி, வேடிக்கை அல்லது வலி எதுவாக இருந்தாலும், அப்படிப்பட்டதான அன்பை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியுமோ என்று எனக்குத் தெரியவில்லை. நான் இயேசுவைப்போல முழுமையாக நேசிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். ஆனால் இதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும்: இந்த அன்பிற்காகவும் அதை முழுமையாக வெளிப்படுத்திய இயேசுவுக்காகவும் நான் நித்தியத்திற்காகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இப்படிப்பட்ட தேவனுக்கு , தம்முடைய குமாரனை நமக்காக அனுப்பிய கர்த்தருக்கு நன்றி செலுத்துவது நமக்கு கடினமான காரியமாய் இருக்கக்கூடாது.

Thoughts on Today's Verse...

I'm not sure I can fully comprehend "unfailing love." To always do the loving thing, whether discipline or reward, fun or pain, I'm not sure I can fully understand that kind of love. I know I am not yet able to love fully like Jesus. But I can tell you this: I am eternally grateful for Jesus, who fully demonstrated it. It should not be hard for us to give thanks for such a loving Lord and our Savior.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , உம்மை அப்பா பிதாவாக வெளிப்படுத்தியதற்காக நன்றி! என்னை மிகவும் நேசித்ததற்காகவும் உமக்கு நன்றி, அதனால் நான் வேண்டிக்கொள்வதற்கும் என் தகுதிக்கு அதிகமாகவும் , எனக்குத் தேவையானதைத் நீர் தருகிறீர்! நீர் எனக்குச் செய்த மிகுந்த தயவுக்காகவும் , எனக்காக நீர் செய்த அன்பான செயல்களுக்காகவும் உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Thank you, Almighty God, for revealing yourself as Abba Father! Thank you for loving me so much that you give me what I need, not what I want or deserve! Thank you for the many kindnesses you have lavished upon me and the loving deeds you have done for me. In Jesus' name, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of சங்கீதம் - 107:31

கருத்து