இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்களிடம் இருக்கும் எந்த காரியம் என்றென்றும் நிலைத்திருக்கும்? நம்மிடம் உள்ள பெரும்பாலானவை அனைத்தும் ஒரு குறுகிய காலத்தில் எங்கோ விழுந்து , உடைந்து அல்லது விலகி ஓடியிருக்கும் . ஆனால் நம்மிடம் என்றென்றும் நிலைத்திருக்கும் மூன்று விஷயங்கள் உள்ளன: தேவன் , நம் கிறிஸ்தவ நண்பர்கள் இன்னுமாய் தேவனை துதிக்கும் துதி, ஆகிய இவைகள் என்றும் நித்தியமானவை.

என்னுடைய ஜெபம்

தேவனே , உம் அடுத்த பெரிய ஆச்சரியத்தின் நாளை எதிர்நோக்குகிறேன். என் ஆண்டவரும் உமது குமாரனும் மகிமையுடன் திரும்பி வருவதையும், அவருக்குத் தகுதியான வரவேற்பையும், கனத்தையும் பெறுவதை காண மேகங்களைப் பார்க்கும்போது ஆயத்தமாய் நிற்கிற தேவதூதர்களுடன் அடியேனும் இணைந்துகொள்ளுகிறேன் . நான் அதை விசுவாசத்தால் மட்டுமே பார்க்கிறேன் ஆயினும் அந்த நாளுக்காக நான் இப்போதே உம்மை போற்றுகிறேன். அந்நாளில் நான் உம்மைப் பார்க்கும் வரையில், உமக்கு ஊழியஞ் செய்ய வேண்டும் என்பதே என் இதயத்தின் விருப்பம் ஆனாலும் என் பலவீனம் எனக்கு இடையூறாக இருக்கிறது , அப்படிப்பட்ட வேளைகளிலே உம் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்ற எனக்கு உதவியருளும் . இயேசுவின் நாமத்தில் உமக்கு என் மனமார்ந்த நன்றியையும், துதியையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து