இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஞானஸ்நானம் என்பது நனைவது மற்றும் கட்டாயமாய் கீழ்ப்படிய வேண்டிய காரிங்களிலில் ஒன்று என்பதை காட்டிலும் மேலானது. நீங்கள் காண்பது , ஆண்டவராகிய இயேசுவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் இவைகளினாலே இரட்சிக்கப்பட்டீர்கள் (1கொரிந்தியர் 15:1-5). தேவன் நமக்கு நாம் அளவிடமுடியாத கிருபையை கொடுத்ததினாலே (ரோமர் 6:1,14,15) இயேசுவுக்குள்ளாய் மீட்பின் வேலையில் பங்ககடையவும் விசுவாசத்தின் மூலமாய் மற்றும் ஞானஸ்நானத்தில் அதை அனுபவிக்கவும் செய்தார்(கலாத்தியர் 3:26-27). நாம் பழைய வாழ்க்கை முறைக்கு மரித்து, கடந்தகாலங்களுக்காக அடக்கம் பண்ணப்பட்டோம். இனி மரணம் நம்மை மேற்கொள்ளாது . இந்த மரணமே மிக முக்கியமான மரணம். புதியதொரு வாழ்க்கைக்காக நாம் எழுப்பப்பட்டோம். கிறிஸ்துவுடனேகூட நாம் புதிய வாழ்கையிலே ஒன்று சேர்க்கப்பட்டோம் இனி அவருடைய வருங்காலம் நமதாகும்.(கொலோசெயர் 3:1-4). நாம் இப்பொழுது வாழ்கிறதான வாழ்க்கை தேவனை மகிமைப்படுத்தவும் மற்றும் அவரோடுகூட நித்ய காலமாய் வாழவுமே. அதாவது சுவிசேஷம் என்பது உபதேசிப்பது மாத்திரமல்ல, கிருபையினாலே அவைகளை நாம் அனுபவிப்பது.

என்னுடைய ஜெபம்

இயேசுவுக்குள்ளாய் மரணத்திலிருந்து எழும்பச்செய்து நீர் கொடுத்த புதிய வாழ்க்கைக்காக உமக்கு நன்றி தகப்பனே. இயேசுவை அனுப்பினதாலே நீர் தந்த கிருபைக்காக நன்றி. கிருபையினாலே நீர் இயேசுவை மரணம், அடக்கம், உயித்தெழுதலை அனுபவிக்கும்படியாய் செய்தமைக்கு நன்றி. என்னுடைய வாழ்க்கை உம்முடைய வல்லமையுள்ள கிருபையை பிரதிபலிக்க செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து