இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சிலநேரங்களில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் மிக எளிமையாகவும் சாதாரணமாகவும் இருக்கின்றன,இல்லையா?பொறுமையை நடைமுறையில் காண்பித்து மற்றவர்களை பாகுபாடின்றி நேர்மையோடு நடத்தி என்னை சுற்றி இருக்கின்றவர்களை நீதியாய் கையாளும்படி செய்யும் . மற்றவர்கள் தேவையில் இருக்கும்பொழுது, அதற்கு அவர்கள் எவ்வளவேனும் பாத்திரவான்களாய் இல்லாதபோதும் அவர்களின் பெரிதான தேவைகளில் நான் உதவிச்செய்யும்படி இரக்கத்தைப் பழக்கப்படுத்திக் கொள்ளச் செய்யும். அவருடைய கிருபையும், உதவியும் இல்லாவிட்டால் நான் தோல்வியடைவேன் என்பதை அறிந்து , என் அப்பா பிதாவோடு கூட தாழ்மையாய் நடக்கச்செய்யும்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, நீர் என்னை உருவாக்கும்பொழுது உம்முடைய சித்தத்தின்படியே வனைந்துக்கொள்ளும். அடியேன் நீதியையும், இரக்கத்தையையும்,தாழ்மையையும் தேடும்பொழுது தயவுசெய்து ஆசீர்வதியும்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து