இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தீர்க்கதரிசியாகிய எரேமியா தேவனுடைய ஜனங்களை நோக்கி எழுபது அழிவுள்ள ஆண்டுகள் முடிந்தப் பின், தேவன் உங்களை விடுவித்து மீட்டமைப்பார். அவர்களோ தேவனை மீண்டும் மீண்டும் தேடாமல் புறக்கணித்தார்கள், ஆனால் அவரோ அவர்களுக்கு கொடுத்த வாக்குதத்ததையும், அவர்களை புறக்கணியாமலும் இருந்தார். அவர் உண்மையுள்ளவராகவே, அவர்களுக்காக ஒரு பிரகாசமான எதிர்காலத்தை திட்டமிட்டு ஆயத்தம்செய்துக் கொண்டிருந்தார்.இந்த வாக்குதத்தத்தை நினைக்கும்பொழுது நம்முடைய பாவம் எவ்வளவு ஆழமான இருள் சூழ்ந்ததாயிருந்தாலும், அவர் நமக்கென்று ஒரு திட்டத்தை உருவாக்கி, நமக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, நம்மை விடுதலைப்பண்ணி ஆசீர்வதிகவே விரும்புகிறார் என்பது விளங்குகிறது. அவர் உண்மையுள்ளவர் என்பதாலும் நாம் அவருடைய குமாரன் மீது கொண்டுள்ள நம்பிக்கையினால் நமக்கு பிரகாசமுள்ள எதிர்காலம் உண்டென்றும் ஜீவனுள்ள நம்பிக்கை கொள்ளுகிறோம். இயேசுவானவர் மாத்திரமே நம்மை நம் எல்லா எதிராளிகளிடமிருந்தும் மீட்கக்கூடும்.

என்னுடைய ஜெபம்

தேவனே, உமது அடியேன் சோர்ந்து, பெலனற்று, உடைக்கப்பட்ட நேரத்திலே விசுவாசத்தைத் தாரும். உம்முடைய வாக்குதத்தத்திலே நம்பிக்கை கொள்ளும்படி என்னை ஊக்கப்படுத்தும். என்னுடைய விசுவாசம் தளரும்போது தைரியம்கொள்ளும்படி உதவிச்செய்யும் . வாழ்க்கையின் சவாலான நேரங்களிலும், சோர்வான சூழ்நிலைகளிலும் எப்படியாயினும் உம்முடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிய உதவிச் செய்தருளும். இயேசுவுக்குள்ளாய் நீர் எனக்கு கொடுத்த பிரகாசமுள்ள எதிர்காலத்திற்காக நன்றி. இந்த பெரிதான ஆசீர்வாதத்தை குறித்து மிகவும் விழிப்புடன் அடியேன் வாழ உதவிச் செய்தருளும். இயேசு கிறித்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து