இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நமது வாழ்க்கைக்கான இலக்குகள் மற்றும் குறிப்பிட்ட கடமைகள் நமக்கு இருந்தாலும் நம்முடைய எதிர்காலத்தை தீர்மானிக்க அது நம்முடையதல்ல. நாம் திட்டமிடலாம், ஆனால் நாம் எதைச் செய்தாலும் அதன் மூலம் கர்த்தரை கனப்படுத்தவும், அவருடைய பணியை நிறைவேற்றவும் நாம் அவ்வாறு செய்கிறோம் என்ற உணர்வுடன் எப்போதும் செய்ய வேண்டும். நாம் திட்டமிடுகிறோம் ஆனால் நாம் நமக்கான தேவனுடைய சித்தத்தின் கீழ் வாழ்கிறோம் என்பதை புரிந்துக்கொள்வோம் : "மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒருவருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்." (யாக்கோபு 4: 13-15). ஒவ்வொரு நாளையும் தேவனின் ஈவாக எண்ணி நாம் அவரை துதிக்க வேண்டும். தேவனை மகிமைப்படுத்த நாம் ஒவ்வொரு இலக்கையும் உருவாக்கி தொடர வேண்டும். ஒவ்வொரு மெய்யான வழிகாட்டுதலும் நம் பிதாவின் வார்த்தையாகிய வசனமும் மற்றும் நம்மை வழிநடத்தும் பரிசுத்த ஆவியானவரே நம்முடைய ஈவுவாகும் .

என்னுடைய ஜெபம்

ஞானமும் அன்பும் நிறைந்த பிதாவே , உமது பரிசுத்த ஆவியினால் என்னை வழிநடத்தும். உமது பரிசுத்த ஞானத்தால் அடியேனை அபிஷேகித்தருளும் . என் வாழ்க்கைக்கான உம்முடைய சித்தத்தைப் பற்றிய முழுமையான புரிதலுக்கு என்னை வழிநடத்துங்கள். ஒவ்வொரு நாளும் உமது நீதியுள்ள குணத்துடனும் கிருபையுடனும் வாழ எனக்கு மிகுந்த ஞானத்தைத் தந்தருளும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து