இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பெரும்பாலும் இன்று , நாம் நமக்கு முன் வாழ்ந்தவர்களையும் இன்னும் நம் முன்னோர்களிடமிருந்து பெற்றுக்கொண்டதான ஒட்டுமொத்த ஞானத்தையும் நம்மிடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறதானவர்களையும் அசட்டைப் பண்ணுகிறோம் . வருகிறதான சில வாரங்களில் முக்கியமாக வயதில் முதிர்ந்தவர்கள் மற்றும் விசுவாசத்தில் தங்களை நிரூபித்தவர்களின் வார்த்தைக்கு அதிக கவனத்துடன் இருக்கக்கடவோம். தேவனுக்கு கீழ்படிவது எவ்வளவு அவசியமானது என்று நம்முடைய பிள்ளைகளுக்கும், பேரபிள்ளைகளுக்கும், முக்கியமாக பிள்ளைகள் பெற்றோருக்கும் கீழ்படிய வேண்டுமென்று நினைப்பூட்டுவோம்.

என்னுடைய ஜெபம்

அன்பின் பரலோகப் பிதாவே, அநேக நேரங்களில் அடியேனுடைய பெற்றோர்களின் வார்த்தைக்கும் ஞானத்துக்கும் சரியாக மதிப்புக்கொடாமல் இருந்தமைக்காக உம்மிடத்தில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் என்மீது கொண்டுள்ள அன்பிற்காகவும், என்னை உம்முடைய வழியிலே நடத்தும்படி கொண்டுள்ள விருப்பத்திற்காகவும் உமக்கு நன்றி. அவர்களை உம்முடைய கிருபையினால் ஆசீர்வதியும், அடியேன் உம் சித்தத்திற்கு இன்னும் அதிகமாய் கீழ்ப்படிந்து இருக்க முற்படுகையில் அடியேனையும் ஆசீர்வதியும். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து