இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம்,நம் வாழ்க்கையை நம் சொந்த விருப்பப்படி , சுயமாய் வாழவில்லை. தேவன் நம்மோடு எப்பொழுதும் நமக்காகவும் இருக்கிறார். நமது எதிர்காலத்தையும் அதின் பாதுகாப்பையும் அவர் கரங்களில் வைத்திருக்கிறார். நமது மீட்பு உறுதியானது, ஒன்று மரணத்திலிருந்து மீட்பு , அதாவது அவருக்கு ஊழியஞ் செய்வதாகும் , அல்லது மரணத்தின் மூலமாய் அவருக்குள் மீட்பு , அதாவது மரணம் மற்றும் பாவத்துடனான போராட்டத்தில் இருந்து மீட்பு . கர்த்தர் நம்மை எல்லாத் தீங்கிலிருந்து நம்மை விலக்கி காப்பார்!

என்னுடைய ஜெபம்

வல்லமைமிக்க பாதுகாவலரே, என் இரட்சிப்பின் கன்மலையே , உம் சமூகம் இல்லாத இடத்திற்கு என்னால் செல்ல முடியாது என்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம் . எனது எதிர்காலம் உம்முடன் பாதுகாப்பாக இருப்பதற்காக நன்றி. என் எதிர்காலத்தையும், என் வாழ்க்கையையும் உம்மிடமாய் திருப்பிக் கொள்ள இந்த வாக்குத்தத்தத்தையும், கண்டித்து வழி நடத்தும் வல்லமையுள்ள ஆவியினால் என் வாழ்க்கையை நடத்துவீர் என்றும் உறுதியளியுங்கள் . இயேசுவின் வல்லமையால் நான் இதை விசுவாசிக்கிறேன் , அவருடைய நாமத்தினாலே நான் கேட்கிறேன். ஆமென்.,

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து