இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பரிசுத்த வேதாகமம் நோவாவை ஒரு நீதிமான் என்று விவரிக்கிறது, அவருடைய தலைமுறையில் குற்றமற்றவர் , அவர் தேவனோடு சஞ்சரித்து , கர்த்தர் கட்டளையிட்ட யாவையும் செய்து முடித்தார் (ஆதியாகமம் 6:9, 22). இதை விட கனமான வார்த்தைகளை நீங்கள் நினைத்து பார்க்க முடியுமா? நான் மரணத்தை தழுவி இயேசுவோடு ஜீவிக்க இந்த வாழ்க்கையை விட்டு கடந்து செல்லும் போது அவர்கள் என் தலைக்கல்லில் என்ன எழுதுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நோவாவைப் பற்றி பரிசுத்த வேதாகமம் சொன்னதைப்போல நான் தகுதியானவனாக இருக்க விரும்புகிறேன்! உங்களுக்கு எப்படி? "நம்முடைய கல்லறையை கடந்து செல்பவர்கள் யாவரும் அறிந்துக்கொள்ளட்டும் இங்கே புதைக்கப்பட்டவர் தேவன் தங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் செய்து முடித்து ஓய்ந்திருக்கிறார்கள் என்று என்று நம்மைப் பற்றி இப்படி எழுதியிருந்தால் நன்றாய் இருக்காது. பிதாவின் மேல் நாம் வைத்திருக்கும் விசுவாசத்தினிமித்தம் இயேசுவானவர் நம்மை குறித்து இப்படிச் சாட்சி கொடுப்பார் என்று கிருபையினால் முழுநிச்சயமாய் விசுவாசிக்கிறேன்.(கொலோசெயர் 1:22).

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , உம்முடைய கிருபையால் இரட்சிக்கப்பட்டோம் என்பதை நாங்கள் முழுமையாக ஒப்புக்கொள்கிறோம், நாங்கள் செய்த குறிப்பிடத்தக்க அல்லது நீதியான காரியங்களினால் அல்ல. அதே நேரத்தில், பிதாவே , நாங்கள் நிச்சயமாக எங்கள் வாழ்க்கையில் உம்மை கனப்படுத்த விரும்புகிறோம், குறிப்பாக நாங்கள் உம் வார்த்தைக்கு கீழ்ப்படிவதினால் உம்முடைய அளவற்ற அன்பு எங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் வித்தியாசத்தை மற்றவர்களுக்குக் காண்பிக்க விரும்புகிறோம். அன்பான பிதாவே , நோவாவை குறித்து நீர் அளித்த நல்ல சாட்சியுள்ள வார்த்தைகளுக்கு நாங்களும் தகுதியானவர்களாக இருக்க எங்களையும் ஆசீர்வதித்தருளும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து