இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் நம் நேரத்தை எங்கு பயன்படுத்துகிறோம், பணத்தை எப்படிச் செலவிடுகிறோம், எதைக் குறித்து நாம் அடிக்கடி நினைக்கிறோம், எதில் சிறந்த முயற்சிகளைச் செய்கிறோம் என்பதை நேர்மையாக மதிப்பிடும்போது, ​​நாம் எதைக் கண்டுபிடிப்போம்? தேவவனையும் அவருடைய காரியங்களையும் மாத்திரமே நம் நோக்கமாய் இருக்கிறதா ? அவரே நம்முடைய முதன்மையான அன்புக்குரியவரா ? நாம் எப்போதும் அவருடைய பிரசன்னத்தைத் தேடுகிறோமா? தேவனானவர் தம்முடைய மக்களிடம், "என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்...." (ஆமோஸ் 5:4, 6) என்று கூறினார். இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபு ஆசிரியர் , "தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்...." (யாக்கோபு 4:8) என்று கூறுகிறார் . ஆம், தேவனுடைய இருதயத்திற்குப் ஏற்ற மனிதனாக இருந்த தாவீதுனுடைய அழைப்பை கேட்ப்போம் , "கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்."

Thoughts on Today's Verse...

When we honestly evaluate where we use our time, how we spend our money, what we think about most frequently, and where we put forth our best efforts, what do we find? Is God our consuming passion? Is he our first love? Do we seek his presence always? God told his people, "Seek me and live..." (Amos 5:4, 6). Jesus' stepbrother, James, challenged us to "Come near to God and he will come near to you" (James 4:8). Yes, let's hear the call of David, the man after God's heart, when he says, "Look to the Lord and his strength; seek his face always."

என்னுடைய ஜெபம்

வல்லமையுள்ள ஆண்டவரே, உம்முடைய சமூகத்தை மாம்ச ரீதியாக அறிய முடியாமல் இருப்பது கடினம், இருப்பினும் எனது பெலவீனத்தினால் சாத்தியமில்லாததை, உமது அற்புதமான பரிசுத்தமும், மகத்துவத்தின் வெளிச்சமும் அதை சாத்தியமற்றதாக்குகிறது என்பதை நான் அறிவேன். அடியேன் உம்மை முகமுகமாய் பார்க்கும் அந்த நாள் வரைக்கும் (1 யோவான் 3:1-3), என் முழு இருதயத்தோடும் நான் உம் சமூகத்தை தேடும் போது, ​​தயவுக்கூர்ந்து உம்முடைய தயவுள்ள சமூகத்தை என் வாழ்வில் தெரியப்படுத்துங்கள். இயேசுவின் நல்ல நாமத்தினாலே , நான் இவை யாவற்றையும் கேட்கிறேன். ஆமென்.

My Prayer...

O mighty Lord, it is hard not to be able to see your face physically, yet I know my imperfection makes that impossible in light of your awesome holiness and majesty. Until that Day I see you face-to-face (1 John 3:1-3), please make your presence known in my life as I seek you with all of my heart. In Jesus' name, I ask this. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  சங்கீதம்-Psalms 105 : 4

கருத்து