இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எபேசியர்களுக்கு எழுதின புஸ்தகத்திலே தேவனின் கிருபையைப் பற்றியும், பரிசுத்த ஆவியினால் நமக்கு வாக்களிக்கப்பட்ட வல்லமையைப் பற்றியும், தேவனுடைய மகத்துவத்தைப் குறித்தும் முழு பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடாத மிக முக்கியமான சில அறிவிப்புகளைச் செய்கிறார். எவ்வாறாயினும், இந்த வசனப் பகுதியானது எபேசியர் புஸ்தகத்தில் மிகவும் மேன்மையான ஒர் குறுகிய வசனமாக இருக்கலாம். தனிப்பட்ட முறையில் இது எனக்கு மிகவும் பிடித்த பரிசுத்த வேதாகமத்தின் ஆசீர்வாதங்களில் ஒன்றாகும், மேலும் அவர் நேசிக்கும் மக்களுக்கு பவுலானவர் கூறும் இறுதி ஆசீர்வாதமான வார்த்தையாகும் . நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக என்று பவுலானவர் கூறுகிறார்! இந்த கிருபையின் வாக்குத்தத்தமானது, விசுவாசத்தின் உறுதியோடு நாம் இயேசுவை நேசிப்பதால், நமக்குக் கொடுக்கப்பட்ட தேவனுடைய கிருபையான அன்பு நிரம்பி வழிவதைக் குறிக்கிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள வாஞ்சை அழியாததாய் இருக்கும் பட்சத்தில் , தேவனுடைய கிருபை நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் நிரம்பி வழிகிறது!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள பிதாவே, நான் உம்மையும் உம்முடைய குமாரனாகிய இயேசுவையும் என் முழு இருதயத்தோடும் முழு மனதோடும் அன்பு கூறுகிறேன். எனது இந்த வாஞ்சை மங்கும்போது அல்லது மற்றவர்களுக்கு அவருடைய கிருபையை குறித்து நான் வெளிப்படுத்துவது தாமதமாகும்போது என்னை மன்னியுங்கள். நான் கையிட்டு செய்யும் எல்லா காரியத்திலும் , அடியேன் சொல்லும் எல்லா வார்த்தைகளிலும் இயேசுவின் மீது எனக்குள்ள அன்பைக் காண்பிக்க வேண்டும் என்ற தணியாத ஆசையை மீண்டும் உற்சாகப்படுத்துங்கள் . அவருடைய நாமத்தினாலே , நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து