இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அன்புள்ள மேய்ப்பர்களாக தேவபக்தியுள்ள ஊழியர்களால் சபை வழிநடத்தப்படுகையில், அது தேவனுடைய மக்களுக்கு என்ன ஒரு அற்புதமான ஆசீர்வாதமாயிருக்கும் . இப்படிபட்டதான மேய்ப்பர்களை நாம் அதிகமாய் நேசித்து , அவர்களுடைய மாதிரிகளை கனம்பண்ணி (எபிரெயர் 13:7-8, 17, 24) மரியாதையுடன் அவர்களைப் பின்பற்றுவது போல , நம்மை மகிமையிலே நித்திய வீட்டிற்கு அழைத்து செல்ல பிரதான மேய்ப்பராகிய இயேசு வெளிப்படும் அந்த நாளிலே அவரிடமிருந்து அவர்கள் இன்னும் அதிகப் பாராட்டுகளைப் பெறுவார்கள் என்பதை நாம் அறிவோம் !

என்னுடைய ஜெபம்

மகிமையுள்ள தேவனே , உம்முடைய திருச்சபையிலே உள்ள ஒவ்வொரு விசுவாசமான மற்றும் அக்கறையுள்ள தலைவருக்கு உம்முடைய மேலான ஆசீர்வாதத்தினாலும் மற்றும் பாராட்டினாலும் அவர்களை ஆசீர்வதித்தருளும் . உம்முடைய உண்மையுள்ள ஊழியர்களிடமும் இப்படிபட்டதான அன்பைக் காண்பிக்க என்னைப் பயன்படுத்துங்கள். இயேசுவின்நல்ல நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து