இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

புதிய ஏற்பாட்டில் அந்திரேயாவை பார்க்கும் ஒவ்வொரு முறையும், அவர் இயேசுவைச் சந்திக்க யாரையாவது அழைத்து வருகிறதை பார்க்கிறோம் (யோவான் 1:40-42, 6:5-9, 12:20-22). இந்த உண்மையைத் தவிர, அந்திரேயா சீமோன் பேதுருவின் சகோதரர் மற்றும் ஒரு மீனவர், போன்ற சிறிய பதிவுகள் அந்திரேயாவை குறித்து பரிசுத்த வேதாகமத்தில் நாம் கற்றுக்கொள்கிறோம். ஆனால் நாம் விரும்பும் மேன்மையை அந்திரேயாவும் பெறவேண்டாமா ? ஆகிலும் அவன் "அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான்." நான் எப்போதும் இயேசுவிடம் மக்களைக் கொண்டு வந்து சேர்க்கும் நற்பெயரைப் பெற விரும்புகிறேன். நீங்களும் விரும்புகிறீர்களா ?

Thoughts on Today's Verse...

Almost every time we see Andrew in the New Testament, he brings someone to meet Jesus (John 1:40-42, 6:5-9, 12:20-22). Aside from this truth and that Andrew was Simon Peter's brother and a fisherman, we learn little else about Andrew in our Bibles. But doesn't Andrew have the kind of reputation you would like to have? "And he brought him to Jesus." I want to have the reputation of always bringing people to Jesus. Don't you?

என்னுடைய ஜெபம்

இரட்சிப்பின் ஊற்றாகிய எங்கள் தேவனே , நான் இயேசுவை பற்றி என் நண்பர்களுடனும், குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள முயலும் போது அடியேனை ஆசீர்வதித்தருளும் . அந்திரேயாவின் முன்மாதிரியைப் பின்பற்ற எனக்கு உதவுங்கள், எப்போதும் மற்றவர்களை கிறிஸ்துவிடம் வழிநடத்தும் ஒருவராக என்னை உருவாக்குங்கள் . இயேசுவின் நல்ல நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

God, our source of salvation, please bless me as I seek to share Jesus with my friends and family. Please help me follow the example of Andrew, becoming someone who is always leading others to Christ. In Jesus' name, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of யோவான்  John  1:40-42

கருத்து