இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மாரநாதா - ஆண்டவராகிய இயேசுவே வாரும்! இது ஆதிக்காலத்து திருச்சபையின் கூக்குரலாகும். குறிப்பாக போராட்டங்களின் மத்தியில் , சோதனை காலங்களில் , பாடுகளின் வேளைகளில் நம்மை நாமே திடன்படுத்திக்கொள்ள, நம்மை சுற்றி இவ்வுலகில் வாழ்கிற காணாமற்போன ஆடுகளாகிய நம் குடும்பத்தாரையும் , நண்பர்களையும் , அயலகத்தாரையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையின் மீதான நமது ஆவல் , "மனந்திரும்பாதவர்களும் " இன்னுமாய் அவர்களுக்கு ஜீவன் உண்டாகும்படி தன்னையே மரிக்கக்கொடுத்த ஆண்டவருக்காக தங்களுடைய வாழ்க்கையை ஊழியம் செய்வதற்காக மாற்றியமைக்காத ஜனங்களிடம் அவருடைய கிருபையைப் பகிர்ந்து கொள்வதில் உள்ள நமது ஆவல் சமமாகவும் அல்லது இன்னும் அதிகமாயும் இருக்க வேண்டும். அவர் வரும் வரை, மற்றவர்களை மனந்திரும்புவதற்கும், அவருக்குள் இரட்சிக்கப் படுவதற்கும் அவருடைய ஊழியத்தை இன்னும் திறன்பட செய்வோம் என்று சொல்லி உறுதி ஏற்போம்.

என்னுடைய ஜெபம்

சாந்தமுள்ள மகா தேவனே, தயவுகூர்ந்து உமது வல்லமையையும் ,கிருபையையும் பிரயோகித்து என் அன்புக்குரியவர்களையும் அன்பான நண்பர்களையும் மனந்திரும்ப செய்யும். அதினால் ஆண்டவராகிய இயேசுவின் இரண்டாம் வருகையிலே அவர்களும் என்னோடே கூட மகிழ்ச்சியிலும், இரட்சிப்பிலும் பங்கு பெறுவார்கள். ஒரே இரட்சகராகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து