இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேடுங்கள்! இது தான் இந்த வசனத்தில் கவனத்தை ஈர்த்த வார்த்தை. இந்த வார்த்தை ஒரு வலிமை வாய்ந்த வார்த்தையாகும், இது எதையாவது நம்முடையதாக மாற்றுவதற்கான உணர்ச்சிபூர்வமான முயற்சியை விவரிக்கிறது. இராஜ்யமும், இந்த இராஜ்யத்தில் இருப்பவர்களின் நீதியும், எங்கள் விருப்பமோ , எங்கள் நம்பிக்கையோ , எங்கள் கனவுவோ அல்ல - அது எங்கள் உணர்வு. எந்த சூழ்நிலையிலும் நாங்கள் அதை தொடருவோம். நாங்கள் அதை உணர்ச்சியோடு தொடருவோம். எங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளும்வரை அல்லது இன்னும் சிறப்பான எங்களுக்கான கூடாரத்தை தேடிக் கண்டுபிடிக்கும் வரை நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தேவனே, உம்முடைய இராஜ்யத்தின் மேலுள்ள எனது வாஞ்சையை விட்டமைக்காகவும் , உமது பண்புகளை தள்ளினமைக்காகவும் அடியேனை மன்னியும். காலைதோறும் உமது பணியின் மீதான ஆர்வத்துடனும், அன்றைய தினத்திற்கான உம்முடைய சித்தத்தின்படியேயும் அடியேனை விழித்தெழச் செய்யும். பிதாவே, என் வீட்டைப் போல உம்முடைய இராஜ்யத்தையும் ஓய்வில்லாமல் வாஞ்சையுடன் தேடுபவராக இருக்க விரும்புகிறேன், தயவுசெய்து அடியேனை அவ்வண்ணமே மாற்றும் . இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து