இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

யோவான் 17ஆம் அதிகாரமானது பரிசுத்த வேதாகமத்திலேயே அதிகமாய் இருதயத்தை பாதித்த அதிகாரமாகும். இயேசுவானவர் தான் மரிக்கப்போகிறதை அறிந்திருந்தார்.அவர் மரிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக அவர் என்ன செய்ய போகிறார் என்றும் ஏன் அதை செய்யப்போகிறார் என்றும் அறியாத சீஷர்களுடன் நேரத்தை செலவழிக்கிறார் என்பதை அறிந்திருக்கிறார். இயேசுவின் மனதில் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் இருந்ததால், அவர் தன்னையும் மற்றும் வருகின்ற வாழ்க்கைக்கு அவரில்லாமல் வாழ அவருடைய சீஷர்களையும் ஆயத்தம்பண்ணுகிறார் . அவர் அவர்கள் ஒன்றிணைந்திருக்க விரும்புகிறார், அதனால் அவர்கள் பலத்துடன் நீடித்திருந்து , தேவனுக்காக உலகுக்கு தாக்கத்தை ஏற்படுத்தமுடியும். தேவனுக்கு மகிமை கொண்டுவருகிறதை அவர் எப்பொழுதும் செய்ய விரும்புகிறார். கைவிடப்படுதலையும், அவமானத்தையும் எதிர்கொள்ளும்போதும் , மற்றவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாயிருந்தது . நாம் துன்பங்களை எதிர்கொள்ளும் போது நம்முடைய இலக்கு என்னவாக இருக்கும் ? ஆம், ஆச்சரியமில்லை! நம்முடைய கண்களை இயேசுவின் மீது வைத்து அவருடைய மாதிரிகளை பின்பற்ற வேண்டும் என்று நமக்கு நினைப்பூட்டுகிறார்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே, இயேசுவானவர் உண்மையுள்ளவராயும் தன்னலமற்றவராயும் இருந்து சிலுவைக்கு செல்லும்வேளையில் உம் இருதயத்தில் உண்டான கிருபை மற்றும் வியாகுலத்தின் இரகசியங்களை என்னால் ஆராய்ந்து அறிய முடியாது . கர்த்தராகிய இயேசுவே, வாழ்க்கையின் மிக பாரமானவைகளை தாங்கிக்கொள்ள அடியேனை ஒரு பலமுள்ள மாதிரியாக வைத்தமைக்காக உமக்கு நன்றி சொன்னால் போதாது . தயவுகூர்ந்து அடியேனுடைய வாழ்க்கையை மற்றவருக்கு ஆசீர்வாதமாக அமையச்செய்யும் இன்னுமாய் கடுமையான சூழ்நிலையில் மற்றவருக்கு உதவவும், நன்மைசெய்யவும் தைரியத்தைத் தாரும். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து