இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நமது சூழ்நிலைகள் மிகவும் சவாலானதாகவும் குழப்பமானதாகவும் இருப்பதினால், நாம் அநேகமுறை கடினமான நேரத்தையும், நெருக்கடிகளையும் கெட்டதென்று எண்ணுகிறோம். எவ்வாறாயினும், கடினமான நேரங்கள், தேவனுடைய உறுதியான தன்மைக்கும் மற்றும் அவருடைய ஊழியத்தை நிறைவேற்ற நாம் வேண்டுமென்பதற்காக, நம்முடைய இருதயத்தை தட்டி எழுப்ப தேவன் அளிக்கும் மற்றொரு வாய்ப்பாக இவைகள் இருக்கலாம் . உசியாவின் மரணம் இஸ்ரவேலுக்கு ஒரு பயங்கரமான நெருக்கடியாக இருந்தது, இருப்பினும் தேவனானவர் இந்த நெருக்கடியை ஏசாயாவுக்கும் இஸ்ரவேலுக்கும் கர்த்தரை அவருடைய மகிமையான பரிசுத்தத்தையும் உண்மையுள்ள அன்பான இரக்கத்தையும் புதிதாகப் பார்க்க ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தினார். இஸ்ரவேலுக்கான தீர்க்கதரிசன ஊழியத்திற்கு ஏசாயாவை அழைக்க, வரலாற்றில் இந்த தருணத்தை தேவனானவர் பயன்படுத்தினார், வரவிருக்கும் இஸ்ரேலின் நெருக்கடிகளைப் பற்றி பேசினார், மேலும் ஏசாயா ஊழியம் செய்த காலங்களுக்கு அப்பால் நம்பிக்கையை வழங்கினார். உங்கள் நெருக்கடிகள், கஷ்டங்கள், சோதனைகள் மற்றும் சிரமங்களில் தேவனை எவ்வாறு பயன்படுத்த முடியும்? உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஆசீர்வதிக்க அவர் உங்களை என்ன செய்ய அழைக்கிறார் என்பதைக் காட்டும்படி நீங்கள் ஏன் அவரிடம் கேட்கக்கூடாது?

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , நான் கஷ்டங்களைச் சகிப்பதினால் தோய்ந்து போகிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். நீ எங்கே இருக்கிறாய், ஏன் என்னை மறந்துவிட்டாய் என்று சில சமயங்களில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என் இருதயத்தின் ஆழத்தில், அன்பான பிதாவே, நீர் அங்கு இருப்பதை நான் அறிவேன். ஆனால் சில சமயங்களில், தேவனே , நான் உம் குரலைக் கேட்காதபோது அல்லது உம்மை முகமுகமாய் பார்க்காதபோது, ​​​​எனக்கு நம்பிக்கை கொள்வது வைத்திருப்பது கடினமாக உள்ளது . தயவு செய்து உமது பரிசுத்த ஆவியால் என் இருதயத்தை வலுப்படுத்தி, உம்மை ஒரு புதிய கோணத்தில் "பார்க்க" எனக்கு உதவுங்கள், அதனால் நான் உமக்கு என்னைத் திறந்து, உம் சித்தத்திற்கும் உமது ஊழியத்துக்கும் மிகவும் சிறப்பாகச் செயல்படுவேன். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து