இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்மில் அநேகர் ஆவிக்குரிய வளர்ச்சி மிக எளிதாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம், இதை ஒப்புக்கொள்ளுவோம். நமக்கு நேரிடும் சோதனையை எதிர்த்து நிற்க சிறிதேனும் முயற்சிக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் கிரியைசெய்யவும், தேவனானவர் அதிகமான மனஅழுத்தம் மற்றும் சிரமத்திலிருந்து நம்மை பாதுகாக்கவும் விரும்புகிறோம். தேவன் நம்மை பரிசுத்த ஆவியின் மூலமாய் அதிகாரமுள்ளவர்களாய் இருக்கச் செய்கிறார். எனினும், ஆவியானவர் நம்முடைய வாழ்க்கையிலே வல்லமையாய் கிரியைசெய்ய வேண்டுமென்றால்,நம்முடைய விருப்பங்களை மனப்பூர்வமாய் தேவனுக்கு ஒப்புவித்து, சாத்தானுக்கு எதிர்த்து நிற்கவேண்டுமென்று நமக்கு நினைப்பூட்டுகிறார்.அவனுக்கும், அவனுடைய சோதனைகளுக்கும் நாம் எதிர்த்து நின்று போராடுவோம் என்றால், அவன் நம்மை விட்டு ஓடிப்போவான். நாம் நம்முடைய பங்களிப்பை அளிப்போம். தேவன் தன்னுடைய வாக்குதத்தத்திற்கு மேலாக நம்மை தாங்குவார் என்று நம்பிக்கை கொண்டிருப்போம்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, பரிசுத்த ஆவியினாலே எனக்குள் உம்முடைய பிரசன்னமும், வல்லமையும் இருப்பதற்காக நன்றி. உம்முடைய சித்தத்தை வெளிப்படுத்தின வசனங்களுக்காக நன்றி.இப்பொழுதும் அன்புள்ள பிதாவே, என்னுடைய விருப்பத்தை சந்தோஷமாய் உம்மிடம் ஒப்புவித்து, உம்முடைய சித்தத்தை என்னிலே நடப்பிக்கும் படி கேட்கிறேன். தயவுகூர்ந்து உம்முடைய ஜனத்தையும், ஆவியையும் உபயோகித்து அடியேனை சாத்தானுடைய தந்திரங்களுக்கு எதிர்த்து நிற்கவும் மற்றும் உமக்காக நான் கொண்டுள்ள கடமைகளின் பாதையை விட்டு விலகச் செய்கிறதான சாத்தானின் முயற்சிகளை அடையாளம் கண்டுகொள்ள உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தாரும். இவைகளை வல்லமையுள்ள இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து