இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய வாழ்க்கைத் துணையை மதித்தால் என்ன நடக்கும் ? விசுவாசமுள்ள மனைவியை ஒரு பகட்டான நட்சத்திரத்தை விட வெளிப்படையாக மதித்தால் என்ன நடக்கும்? பணத்தைக் காட்டிலும் குணத்தை அதிகமாக மதித்தால் என்ன நடக்கும்? இது நம் கலாச்சாரத்தை மாற்றி, நம்முடைய திருமணங்களை மேம்படுத்தி , மேலும் வலுவான மற்றும் சிறந்த சீர்பொருந்தின பிள்ளைகளை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன். தேவன் மகிழ்ச்சியடைவார் என்று எனக்குத் தெரியும்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவே, விசுவாசத்திலே சிறந்த ஸ்த்ரீகளை வேதவசனத்தில் சந்தித்தமைக்காக உமக்கு நன்றி. உம்முடைய இராஜ்யத்திலே அடியேன் சந்தித்ததான தேவபக்தியுள்ள பெண்களுக்காக உமக்கு நன்றி. என்னுடைய வாழ்க்கையில் தேவபக்தியுள்ள பெண்களை விசேஷமாக நல்லொழுக்கமும், குணசாலியுமான மனைவிகளை மதிக்கிறேன் என்பதை விளங்கச்செய்ய அடியேனை தயவாய் உபயோகித்தருளும். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து