இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பவுல் தீமோத்தேயுவிடம், போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் (1தீமோ 6:6) என்று கூறியிருக்கிறார். இந்த ஆதாயத்தின் ( பொக்கிஷத்தின் ) மூலம், எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிப்பதே முக்கியத்துவம் வாய்ந்தது .நாம் எந்த குறைச்சலில் இருந்தாலும் நம் இதயத்தின் ஆழத்திலிருந்து தேவனை நேசிப்பதே முக்கியமானது. இயேசுவைப் பொறுத்தவரை ஐசுவரியவான்களாகவும் , தேவ பக்தியைக் காண்பிப்பவர்களாகவும் இருப்பது மிகவும் கடினமான சவால், அப்படிப்பட்டவர்கள் ஐசுவரியம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தேவ பக்தியுடன் இருப்பதில் திருப்தியடையும் நபராக இருப்பார்கள் என்பதையும் விளங்கச்செய்கிறவர்கள்.எளியோர் மற்றும் தேவபக்தி உடையவர்கள் அதே திறனை வெளிப்படுத்தியுள்ளனர். ஆகவே, நாம் செல்வத்தில் எவ்வளவு ஐசுவரியவானாக இருக்கிறோம் என்பதல்ல, கிருபையில் நாம் எவ்வளவு ஐசுவரியவான் என்பதே ஒரு அடிப்படையான காரியமாகும்.

என்னுடைய ஜெபம்

நிலைவரமுள்ள ஆவியும், உண்மையுமுள்ள பிதாவே, அமைதியற்ற மற்றும் பேராசை கொண்ட இருதயத்தில் எனக்குள்ளே போதுமென்கிற மனதை உம்முடைய சமூகத்திலிருந்தும், குணாதிசியத்திலிருந்தும் கண்டுபிடிக்க உதவியருளும். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து