இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பெரும்பான்மையான சட்டங்கள் !" அதுதான் ஜனநாயகத்தின் கட்டளை. வரலாற்று காலப்பகுதியில் இது அநேகருக்கு ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட அரசியல் தத்துவமாகும்."பெரும்பான்மையான சட்டம் " தேவனுடைய ராஜ்யத்திற்கு பொருந்தாது. தரத்தை நிர்ணயிக்கிறவர் தேவன் மட்டுமே, நாம் அல்ல. தேவனுடைய பரிசுத்தமே நமது இலக்கு, மற்றவர்களை விட சிறப்பாய் இருக்க முயற்சிப்பது அல்ல. பெரும்பாலானவர்கள், ஒருபோதும் கர்த்தரின் வழியைக் கண்டுபிடிப்பதில்லை என்பது வருந்தத்தக்கது. அவர்கள் தங்கள் வழியையே விரும்புகிறார்கள்.காரியங்களை நம் வழியில் விரும்புவதில் ஒரு முக்கியமான சிக்கல்: இது கேட்டுக்கு போக வழி வகுக்கிறது. எல்லா உயிர்களையும் சிருஷ்டித்தவரும் , பராமரிப்பவருமான தேவன் மட்டுமே வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரலை அமைக்க முடியும்.ஜீவனுக்கு போகிற வழியை அறிந்துக் கொள்ள அவருடைய உதவியையும் வழிகாட்டுலையும் கேட்போமாக !

என்னுடைய ஜெபம்

பிதாவே, என்னுடைய இருதயம் ,எண்ணங்கள், வார்த்தைகள் , நேரம் , வேலைகள் , குடும்பம் , மற்றும் வாழ்க்கை ஆகிய யாவும் உம் வழியில் இருப்பதாக . நான் உமக்கு பிரியமான வகையில் வாழ விரும்புகிறேன். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து