இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவானவர் தேவனுடைய கிரியையை நடப்பிக்க வந்தார். அவர் தேவனுடைய குமாரனாக வந்தார், தேவனுடைய குமாரன் மனிதனாக மாம்சத்தில் தோன்றினார் (யோவான் 1:14-18). அவர் தேவனை வெளிப்படுத்தும்படியாய் வந்தார். இயேசுவானவர் வந்தபோது , பலர் தேவனை மகிமைப்படுத்தினர் . ஜனங்கள் தேவனை அவருக்குள் பார்க்க வேண்டும் என்பதற்காக அவர் இவ்வுலகிற்கு வந்தார். நீங்கள் இயேசுவை அறிந்திருக்கிறீர்களா ? நீங்கள் அறிந்தால் , நீங்கள் அவரை நன்கு அறிந்திருக்கிறீர்களா? இந்த நிகழ்வில் லூக்கா நமக்கு நினைப்பூட்டியது போல, நம் வாழும் உலகில் இயேசுவானவர் கிரியை நடப்பித்ததை ஜனங்கள் பார்த்தபோது, ​​அவர்கள் சொன்னார்கள்: "தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் ." இன்று நாம் வாழும் இவ்வுலகில் தேவனானவர் நடப்பிக்கும் கிரியைகளை காண்போம் , அவருடைய மகிமையுள்ள பிரசன்னத்தை வெளிப்படுத்த நம்மை எடுத்து பயன்படுத்த அவரை அழைப்போம்!

என்னுடைய ஜெபம்

கிருபையுள்ள பிதாவே, நித்திய தேவனே, உம்மையும், உம்முடைய அன்பையும், அளவற்ற கிருபையையும், மகா மேன்மையான இரட்சிப்பையும் இயேசுவுக்குள் எங்களுக்கு வெளிப்படுத்தியதற்காக உமக்கு கோடானு கோடி நன்றி. நாங்கள் வாழும் இவ்வுலகத்திற்கு உம்முடைய குமாரனை அனுப்பி எங்களை மீட்டு உம்முடைய பிள்ளையாக மாற்றியதற்காக நன்றி. தேவனே , இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எல்லா மகிமையும் கனமும் புகழ்ச்சியும் உமக்கே உண்டாயிருப்பதாக . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து