இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்கள் அருகில் உள்ளவர்கள் அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் உள்ள புதிய அயலகத்தாரை வரவேற்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்கள் திருச்சபைக்கு அல்லது வேதப்பாடக் கூடுகைக்கு பார்வையாளர்களை நீங்கள் தனிப்பட்ட முறையில் எவ்வளவு அன்புடன் வரவேற்கிறீர்கள்? கடைசியாக உங்கள் சபையில் புதிதாக ஒருவரை இரவு உணவிற்கு அல்லது உங்கள் கிறிஸ்தவ நண்பர்களுடனான ஐக்கியத்திற்கு எப்போது அழைத்தீர்கள் ? சிலருக்கு இயல்பாகவே விருந்தோம்பும் தாலந்து இருக்கும்போது, கிறிஸ்துவ தொழுகையிலும், ஐக்கியத்திலும் பங்குகொள்கிறதான அறிமுகமில்லாதவர்களிடத்தில் நாம் அனைவரும் அன்புடனும், வெளிப்படையாகவும் இருக்கவேண்டும். ஒவ்வொரு வாரமும் திருச்சபைக்கு ஒரு புதிய நபரைச் சந்தித்து வரவேற்க ஏன் தீர்மானம் செய்யக்கூடாது. இந்த மனித நேயமற்ற உலகிலே, இயேசுவினுடைய கிருபையையும் , அடைக்கலத்தையும் , அவருடைய மக்களையும் தேடுகிறவர்களுடைய வாழ்க்கையில் நாம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, புதிதாக வருகிறதான மக்களை திறந்த மனதுடனே அன்புடன் வரவேற்க எனக்கும் திருச்சபைக்கும் தயவுக்கூர்ந்து உதவியருளும். தயவுசெய்து உமது கிருபையைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களுக்கு ஒரு கிறிஸ்தவ தங்குமிடத்தை வழங்கவும் எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இயேசுவின் நாமத்திலே. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து