இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனானவர் எல்லா ஆறுதலின் தேவனாயிருக்கிறார் (பார்க்க 2 கொரி. 1). நம்முடைய நன்மைக்காக மாத்திரமே, நம் பாவங்களையும், மீறுதல்களையும் அவர் கடுமையாக கையாளுகிறார். இது சிறிது நேரம் மாத்திரமே நிலைக்கும் பிற்பாடு களிப்புண்டாக வழிவகுக்கும். நீங்கள் சிட்சையின் நேரத்திலும் அல்லது பாவத்தின் கொடூரமான விளைவுகளை எதிர்க்கொள்ளும் வேளையிலும், தயவுக்கூர்ந்து சோர்ந்து போகாதிருங்கள். விடியற்காலை வரும், அந்த விடியலிலே தேவக் கிருபை உண்டாகும். இது காத்திருப்பதை விட அதிகமாகும் !

என்னுடைய ஜெபம்

பிதாவே, தயவுக்கூர்ந்து துயரங்களையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும் உமது பிள்ளைகளை ஆசீர்வதியும். தயவாய் அவர்களுக்கு இரவை பொறுமையோடு சகிக்கவும் , அதன் பின் அவர்களுக்கு விடியல் வரும்போது தங்கள் முன் இருப்பதான பெரிய களிப்பை அனுபவிக்கவும் அவர்களுக்கு உதவுங்கள். அன்புள்ள ஆண்டவரே, தயவுசெய்து பின்வரும் ஜனங்களை ஆசீர்வதித்து, உமது சந்தோஷத்தைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவுங்கள் ... இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து