இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஆண்டின் இந்த காலகட்டத்தில் , நாங்கள் வசிக்கும் இடம் மிகவும் உஷ்ணமாக இருக்கும் . தழலுள்ள நிலக்கரியைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை; நடைபாதையை உபயோகிக்க முயற்சிக்கலாம் ! ஆனால் பற்றியெறியும் நிலக்கரி குறித்துயை இந்த நினைப்பூட்டல் நம் அனைவருக்கும் நல்லது. நாம் ஆவிக்குரிய பிரகாரமாக மிகவும் பெலனுள்ள உணர்வைப் பெறுகிறோம், இயேசுவுடன் நமது ஆவிக்குரிய கவனத்தைத் தளர்த்துகிறோம். அப்போதுதான் நாம் ஒரு "விருப்பமான " சோதனையால் எளிதில் அகப்பட்டு மயக்கப்படுகிறோம், குறிப்பாக பாவத்துடன் சிறிது நேரதத்தை செலவழிக்கலாம் என்று நாம் கருதும்போது அப்படி ஆகிறது . ஆனால் பரிசுத்த ஆவியானவர் சாலமோன் என்ற ஞானியின் மூலம் நமக்கு நினைப்பூட்டுகிறார், நாம் தீமையுடன் சில நேரம் செலவிடும்போது , சோதனைக்கு மனமுவந்து நம்மை ஒப்புக்கொடுக்கிறோம் , ​​இறுதியில் நாம் எரிக்கப்படுவோம். பாதரட்சை இல்லாதபோது நாம் சூடான தழலோடு விளையாட முடியாது, மேலும் நம்முடைய பாவ மற்றும் கலகத்தனமான தவறுகளுக்காக சாத்தான் நம்மை மீண்டும் மீண்டும் எரிக்க முடியும் என்பதை அறிந்தால் நாம் சோதனையுடன் நேரத்தை செலவிடமாட்டோம் !

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , அன்பான பிதாவே மற்றும் நல் மேய்ப்பரே, அடியேன் சில சமயங்களில் ஆரோக்கியமற்ற , தவறான மற்றும் பரிசுத்தமில்லாத காரியங்களோடு என் நேரத்தை செலவிட அனுமதிக்கிறேன் என்று ஒப்புக்கொள்கிறேன் அதற்காக தயவுசெய்து என்னை மன்னியுங்கள். . இந்த காரியங்களில் எனது முட்டாள்தனங்களிலிருந்து அநேகவேளை என்னை விடுவித்ததற்காக உமக்கு நன்றி - சோதனையான காரியங்களில் நேரத்தை செலவிடுவது மற்றும் ஆவிக்குரிய ரீதியில் அழிவுகளை உண்டாக்கும் காரியங்களில் என்னை வெளிப்படுத்துவது. நான் என்னை முற்றிலுமாக உமக்கு அர்ப்பணிக்க முற்படுகையில், ஆபத்தான மற்றும் பாவமான காரியங்களிலிருந்து நான் தப்பிக்க முற்படுகையில், தயவுக்கூர்ந்து எனக்கு பெலன்,ஞானம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் அடியேனை ஆசீர்வதித்தருளும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து