இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் இயேசுவைக் காணும் போது அவர், நம்மிடம் " நீங்கள் என்னுடையவர்கள் ! என்னுடைய நீதியும், மகிமையும் உங்களுடையது! உங்கள் பிதாவின் நித்திய பலனுக்குள் பிரவேசியுங்கள் " என்று சொல்லும் நாளை உங்களால் கற்பனைச் செய்து பார்க்க முடியவில்லையா. நாம் கிறிஸ்துவுக்குட்பட்டிருந்தால் , ஆக்கினைத்தீர்ப்பில்லை. பிதாவாகிய தேவனுடன் வரவேற்பு மட்டுமே! அவருடைய ஆவி நமக்குள்ளாய் வாழ்கிறது. பாவம், மரணம் இவற்றின் பிடியிலிருந்து அவருடைய கிருபை நம்மை விடுவிக்கிறது. நம்முடைய பாவங்களுக்கான விலையை அவருடைய குமாரன் கொடுத்திருக்கிறார். நாம் தேவனுடைய பிரியமான பிள்ளைகளாய் இருக்கிறோம் !

என்னுடைய ஜெபம்

அன்பும், கிருபையுமுள்ள பிதாவே, உம்முடைய இரக்கத்திற்காகவும் , கிருபைக்காகவும் உம்மை துதிக்கிறோம். உம்முடைய என்றும் மாறாத மற்றும் மீட்பின் அன்பு எப்பொழுதும் தொய்ந்து போவதில்லை. உம்முடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. உம் அன்பு காலைதோறும் புதியதாய் இருப்பதினால் உம்முடைய ஆவியினால் என் வாழ்க்கையை நிரப்பி, மற்றொரு நாளை எதிர்க் கொள்ள உம்முடைய நம்பிக்கை என்னை உயிர்ப்பிக்கிறது. உமக்கு நன்றி ! இயேசுவின் நாமத்தினாலே உம்மை துதிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து