இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

விசனமான காரியம் என்னவென்றால் , மனிதர்கள் எப்போதும் வாழ்க்கையின் "மேல் நோக்கி போகும் வரிசையில்" அவர்கள் இடத்தை வரையறுக்க முயற்சிப்பதாகத் தெரிகிறது. அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி, நான் (இயேசு) உண்டாக்கின என்னுடைய ராஜ்ஜியத்தில் ஒரு பகுதியாக நீங்கள் இருக்க வேண்டுமானால், வாழ்க்கையில் கைக்கொள்ளும் அனுதின சட்டமாகிய "மேல் நோக்கி போகும் வரிசை " என்ற கருத்தை உங்கள் மனதிலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்று இயேசுவானவர் அவர்களுக்கு நினைப்பூட்டினார். அவருடைய சீஷர்கள், சிறுபிள்ளைகள் இயேசுவை சந்திக்க அனுமதி மறுத்ததால் அவர் அவர்களிடம் கோபமாக இருந்தார், வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் அவருடைய சீஷர்கள் சிறுபிள்ளைகள் தங்களுடைய எஜமானரின் நேரம், ஆற்றல் மற்றும் கவனத்திற்கு தகுதியானவர்கள் அல்ல என்று அவர்கள் மிகவும் ஆழமாக கருதினார்கள் . ஆனால் இயேசுவானவர் எப்பொழுதும் செய்ததைப் போலவே, அவர்களின் பொதுவான உலக மதிப்புகளை தலைகீழாக மாற்றி, அவர்களின் சுய-முக்கிய உணர்வை விட சிறுபிள்ளைகளின் குணாதிசயங்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டினார். குழந்தைகளைப் போல மாறாவிட்டால் அவர்கள் ஒருபோதும் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து புரிந்து கொள்ளவும் மாட்டார்கள், தேவனைப் போல வாழவும் மாட்டார்கள் என்று கூறினார் .

என்னுடைய ஜெபம்

அப்பா,அடியேனை உம்முடைய பிள்ளையாக எண்ணி மதிப்பதற்காக உமக்கு நன்றி. உமக்காகவும் உம்முடைய ராஜ்ஜியத்திற்காகவும் நான் வாழ முற்படுகையில், என் ஆச்சரிய உணர்வையும், பணிவு மனப்பான்மையையும், உம் மீதான பயபக்தியுடன் கூடிய பிரமிப்பையும் மீண்டும் எழுப்புங்கள்! நான் அவரைப் போல மாற வேண்டும் சொல்லி ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே விண்ணப்பிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து