இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சிட்சையை தண்டனை என்று நாம் தவறாக எண்ணி குழப்பமடையாவிட்டாலுங் கூட, இது கடினமானதாகவும், எரிச்சலூட்டுவதாகவும், தேவையற்றதாகவும் கருதப்படுகிறது. நம்மில் சோம்பலான மற்றும் பாவமுள்ள பகுதிகளுக்கு எல்லைகளை விரும்புவதில்லை அவைகள் நன்மைக்கு ஏதுவாக இருந்தாலும், அதற்கு நோக்கம் இருக்காது , ஏனென்றால் நாம் என்ன செய்ய விரும்புகிறோமோ அவற்றிற்கு முரண்படக்கூடும். ஆனால் கர்த்தர் நம்மை நேசிப்பதினால் சிட்சித்து ஆசிர்வதிக்கிறார் . இது அவரது சந்தோஷத்தின் அடையாளம். ஏன் ?ஏனென்றால் அவர் நம்மை மாற்றாமல், ஊக்கமின்றி, ஆர்வமின்றி விட்டுவிட விரும்புவதில்லை. நாம், நம்முடைய இலக்கை நெருங்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார்: இயேசு!

என்னுடைய ஜெபம்

நீதியுள்ள பிதாவே, அடியேன் சிட்சையை அதிகம் விரும்புவதில்லையென்று ஒப்புக்கொள்ளுகிறேன். ஆயினும், பிதாவே , உங்கள் சிட்சை எனது நன்மைக்காகவும் ஆவிக்குரிய ஆசீர்வாதத்துக்காகவும் என்பதை ஆழமாக அறிவேன். தயவுக்கூர்ந்து எனது வாழ்க்கையின் சூழ்நிலையை நன்றாய் தெரிந்துகொண்டு அவைகளை உபயோகப்படுத்தி இயேசுவை போல் ஆக உதவுங்கள். அவரின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து