இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அப்பா , ஒரு குழந்தை பேசுவதை கேளுங்கள், அப்பொழுது அதின் ஆரம்ப மழலையின் சத்தத்தை நீங்கள் கேட்பீர்கள். அறிந்துகொள்ளுதல் , நம்பிக்கை, உதவியற்ற, சார்ந்து இருப்பது, மற்றும் நெருக்கம் ஆகிய இந்த வார்த்தைகளினாலே தேவனிடம் சம்பாஷிக்க ஆவியானவர் அதிகாரம் கொடுக்கிறார் என்பதை இயேசு நமக்கு காண்பிக்கிறார். நாம் பிதாவுக்கு அஞ்சவேண்டியதில்லையென்று ஆவியானவர் தாமே நமக்கு உறுதியளிக்கிறார் , ஆனாலும் அவரை அன்பும் பரிவும் பிதாவாக கிட்டி சேரலாம் ஏனென்றால் அவர் எப்பொழுதும் நம்முடைய இருதயத்துக்கு செவிகொடுத்து,நம் வாழ்க்கையை ஆசீர்வதிக்கவே விருப்பமுள்ளவராய் இருக்கிறார்.

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , நீர் மகிமையும் , மாட்சிமையுமானவர். உம்முடைய கிரியைகள் ஆச்சரியமானவைகள். கர்த்தாவே, உமது வல்லமை அளவிட முடியாதது. எல்லாம் வல்ல தேவனே , உம் கிருபை மிக அற்புதமானது. பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே, நான் எப்போதும் உம்மை கிட்டி சேரும்படியாய் என்னுடனே இருக்கும் தந்தையாக இருப்பதற்காக உமக்கு நன்றி. தயவுசெய்து இன்று என் வாழ்க்கையில் நீர் அருகிலிருப்பதை உணர்ந்து கொள்ள செய்யும் . இயேசுவின் நாமத்திலே . ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து