இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் முதலாவது நம்மிடத்தில் அன்புகூர்ந்ததினால் நாம் மற்றவர்களிடத்தில் அன்புகூருகிறோம். நம் பரலோகத்தின் பிதாவானவர் இயேசுவுக்குள்ளாய் எப்படி அன்புகூர வேண்டுமென்று நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். நம் அப்பா பிதாவானவர் நமக்கு பாதுகாப்பையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறார், அதனால் நாம் இன்னும் முழுமையாய் அன்புகூர முடியும். பரிசுத்தமும் சர்வவல்லமையுள்ள தேவன் நம்மை தைரியமாகவும், இணக்கமாகவும் நேசித்ததினால் அன்பை சரியாக புரிந்து கொள்ளவும், வரையறுக்கவும் நம்மால் முடியும்.நாம் அன்பின் ஆதாரம் அல்ல: தேவன் அப்படியாய் இருக்கிறார், நாம் அன்பின் சிறந்த மாதிரி அல்ல: தேவன் அப்படியாய் இருக்கிறார். நாம் கவனமாக இருக்க முனைகிறோம் , எனவே எவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறோமோ அவர்களுடன் மாத்திரமே நம் அன்பை பகிர்ந்து கொள்கிறோம் : தேவனுடைய அன்பு விசாலமாகவும், அனைவருக்காகவும் வைக்கப்பட்டிருக்கிறது. அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.

என்னுடைய ஜெபம்

நீதியுள்ள பிதாவே, எல்லா வேளைகளிலும் நான் உம்முடைய பிள்ளைகள் மீது அன்புடனும் கவனத்துடனும் இருக்க உதவிச் செய்யும் . நீர் என்னை அன்புகூருவது போல நானும் மற்றவர்களை அன்புகூர தயவுச் செய்து எனக்கு உதவுங்கள் . ஒருவருடைய விஷேசமான தேவைகளிலே அவருடைய வாழ்க்கையை அன்புடன் தொடவும், அவர்கள் அந்த அன்பிற்க்கு சாதகமாக பதில் அளித்தாலும் , அளிக்கவிட்டாலும் ,நான் அவர்களை அன்புகூரவும் இன்று குறிப்பாக கேட்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Verse of the Day Wall Art

கருத்து