இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அன்றாட வாழ்வில் உண்மையாய் வெளிப்படுத்தும் அன்பினாலும் சத்தியத்தினாலும் நம்முடைய குணாதிசயம் அளவிடப்படுகிறது. நாம் போலியாய் காண்பிக்க இந்த நற்பண்புகள் எளியவைகள் அல்ல. நாம் ஒருவர் மீது அதிகாரம் செலுத்த முடியும் என்றபோதிலும் அவர்களை நாம் கனிவுடனும், உண்மையான அக்கறையுடனும் நடத்தும்போது, இரக்கம் நிறைந்த அன்பினை விளங்கச்செய்கிறோம். சத்தியம் என்பது உண்மையின் நபராக இருப்பது - உண்மையானவராயும் , நம்பகமானவராயும் வார்த்தையிலும் செயலிலும் இருப்பது. இந்த நற்பண்புகள் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் பகுதியாக இருந்து நம்முடைய அடையாளத்தை ஊக்குவிக்கும். அப்படி அவர்கள் செய்யும்போது மற்றவர்களும் கவனிப்பார்கள், தேவனும் மகிழ்ச்சியடைவர்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமானவரே —- உண்மையும், உருக்கமுமானவரே, இரக்கம் நிறைந்தவரே, நீடித்த அன்புள்ள தேவனே, பெலன் மற்றும் இரக்கம் , பரிசுத்தம் மற்றும் உருக்கம் , அன்பு மற்றும் உண்மை ஆகியவற்றில் நீர் உதாரணமாயிருப்பதற்காக உம்மை துதிக்கிறேன் . உம் சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கும்போதும் என் இருதயத்திலே இந்த குணாதிசயங்களை வனைந்துகொள்ளும் மற்றும் உம்முடைய ஆவியின் மறுரூபமாகும் வல்லமைக்கு என் வாழ்க்கையை திறந்தருளும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து