இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அநேக வேளைகளில் நாம் தேவனுடைய சிருஷ்டிப்பின் அற்புதங்களிலும், அவருடைய கிருபையின் அற்புதமான ஆசீர்வாதங்களிலும் மூழ்கி மகிழ்ந்து , அவருடைய சத்தியத்தை நமக்கு போதிக்கும்படி அவரிடம் கேட்க மறந்துவிடுகிறோம். அவருடைய மகத்துவமான சிருஷ்டிப்புக்காக அவரைப் பிரமிப்புடன் துதிப்பது மட்டுமல்லாமல், அவருடைய சித்தத்தை உணர்ந்து, அதை நம்முடைய அனுதின வாழ்வில் பிரயோகித்து , அவரை தொழுது கொள்ளவும் செய்வோமாக .

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், விலையேறப்பெற்றதுமான பிதாவே, உமது சத்தியத்தை எனக்குப் போதித்தருளும். உம் சித்தத்திற்கு நேராய் என்னை வழிநடத்தும் . உமது ஞானத்தினாலே என்னை நற்பாதையிலே வழிநடத்தும் . நீர் என்னை என் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே அடியேனுக்குக்கென்று வைத்துள்ள திட்டங்களை என்னுடைய ​​வாழ்க்கையும், எனது விருப்பங்களும பிரதிபலிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தினாலே நான் இவற்றைக் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து