இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் கடைசியாக எப்போது ஒரு பாடலை உருவாக்கினீர்கள்? கடைசியாக நீங்கள் தேவனை துதித்து பாடலை உருவாக்கினீர்களா? உங்களால் அதை செய்ய முடியாது என்று கவலைப்படுகிறீர்களா? அது நன்றாக இருக்கும் என்று நினைக்கவில்லையா? கவலைப்படாதீர்கள், சரியான குரல்வளம் அல்லது மெல்லிய காதுக்கினிய இசை போன்றவற்றை பொருட்படுத்தாமல் உங்களுடைய இருதயம் பாடும் பாடலை ஆவலுடன் கேட்பவர் அப்பா பிதா மாத்திரமே. அவர் உம்மோடு மகிழ்ந்து களிகூர விரும்புகிறார். ஆகையால் உங்களுடைய இருதயத்தை திறந்து குரலைஉயர்த்தி தேவனை துதிக்கும்படியாய் பாடுவோம்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், இரக்கமும் நிறைந்த சர்வவல்லமையுள்ள தேவனே, புகழ்பெற்ற மகிமையாய் சூரியன் உதித்து அஸ்தமித்ததற்காக நான் உன்னைப் துதிக்கிறேன். கிருபையின் ஈவுக்காக நான் உம்மை துதிக்கிறேன். உம்முடைய ஜனங்கள் மீண்டும் மீண்டும் பாதிப்புக்கு ஆளாகிக் கொண்டிருந்தாலும், நீர் அவர்களை அற்புதமாய் பாதுகாப்பதற்காக அடியேன் உம்மை துதிக்கிறேன். ஆபிரகாமின் குமாரனும், தாவீதின் குமாரனும் என்னுடைய மேசியாவும், கர்த்தருமாகிய இயேசுவை அனுப்பியதற்காக உம்மை துதிக்கிறேன். அவரை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழச் செய்ததற்காக உம்மை துதிக்கிறேன். உம்முடைய பிள்ளைகளுக்காக அவரை மறுபடியும் அனுப்புவீர் என்ற வாக்குத்தத்தத்திற்காக உம்மை துதிக்கிறேன். அடியேனுடைய வாழ்க்கையிலே உம்முடைய கிரியைக்காக உம்மை துதிக்கிறேன். ஆண்டவரே, நான் உம்முடைய பிள்ளையாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இயேசுவின் நாமத்தில் துதிகளை செலுத்துகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து