இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இரவிலே வானத்தின் நட்சத்திர தொகுப்புகளின் அதிசயத்தை நோக்கிப் பாருங்கள். பூமியின் அதிசயங்களின் நம்பமுடியாத பன்முகத்தன்மையைப் பற்றிச் சிந்தியுங்கள். உங்கள் சொந்த வாழ்க்கையைப் பாருங்கள், உங்கள் சொந்த அனுபவத்தில் தேவனின் கிரியையின் கைத்தடங்களைப் பாருங்கள் (ரோம 8:28) .இயேசு சொன்னது போலவே , நம் பிதாவானவர் இதுவரைக்கும் கிரியை செய்துவருகிறார் (யோவான் 5:17). ஆம், நம் சொந்த வாழ்க்கையை செயல்படுத்துவதில் நாம் தனியாக இல்லை என்பதை அறிவது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது (சங்கீதம் 139 ; பிலிப்பியர் 2:13). இவ்வுலகத்தின் சிருஷ்டிகரான கர்த்தராகிய ஆண்டவர் நம்மிலும் நமக்காகவும் கிரியை செய்கிறார் என்பதை அறிவது ஆழ்ந்த மகிழ்ச்சியாயிருக்கிறது . கர்த்தரை துதித்து பாடுவது நமக்கு இயற்கையான பதிலாக இருப்பதில் ஆச்சரியமில்லை!

என்னுடைய ஜெபம்

பரலோகத்தின் அன்புள்ள பிதாவே, உம்முடைய சிருஷ்டிப்பின் மகத்துவத்தில் வெளிப்படுத்தப்பட்ட வல்லமை மற்றும் மகிமைக்காக நான் உம்மை துதிக்கிறேன். என்னை மறுரூபமாக்கி மீண்டும் நன்றாக உருவாக்கிய உம்முடைய கிரியைக்காக நன்றி. தயவுகூர்ந்து உமது மறுரூபமாக்கும் கிரியையை என்னில் தொடருங்கள். அடியேன் எவ்வண்ணமாக இருக்கவேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ அவ்வண்ணமாகவே என்னை வனைந்துக் கொள்ளுங்கள் . இயேசுவின் நாமத்தினாலே. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து