இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பெரும்பாலும், நம்மில் விசுவாசத்தின் ஆசீர்வாதங்களையும் தேவனுடைய வார்த்தையின் வழிகாட்டுதல்களையும் பெற்றவர்கள் அவைகளை முழுமனதோடே பாராட்டுவதில்லை. ஒருவருடைய விலைமதிப்பு,குணாதிசயம் மற்றும் நோக்கம் போன்றவற்றை சத்தியத்தின் தரமில்லாமல் வரையறுக்க முயற்சிப்பது எப்படி இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? ஒரு வரைபடம் மற்றும் ஒரு திசைகாட்டி இல்லாமல் எப்படி பயணம் செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்? காரிருளில் முற்றிலும் திகைத்ததான ஒரு குழந்தையாக அறிமுகமில்லாத இடத்தில் விழிப்பது எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள் ? இப்போது அதைப் பற்றி எல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை, கவலைப் படவேண்டுமா? என்றால்.. இல்லை, தேவனுடைய வார்த்தை - வசனமும், அவருடையக் குமாரனும் - நம் காரிருள் சூழ்ந்த பாதைக்கு வெளிச்சத்தைத் தந்து , வீட்டிற்கு செல்லும் வழியை நமக்கு காண்பிக்கி(றது)றார்கள் !

என்னுடைய ஜெபம்

கர்த்தாவே, என் அப்பா பிதாவே , என்னை காரிருளில் விடாததற்கு நன்றி. உம்முடைய வார்த்தை என் பாதைக்கு வெளிச்சமாயிருக்கிறது , உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிற உம்முடைய குமாரன், என்னுடைய வாழ்க்கைக்கு வெளிச்சமாயிருக்கிறார். என் பாதையைக் கண்டுபிடிக்க என்னை தனியே விடாததற்கு நன்றி, இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து