இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடனான நமது உறவு இயேசுவின் கிருபாதார பலியின் மீதும், இன்னுமாய் கீழ்ப்படிதலுள்ள விசுவாசத்தின் மூலம் அந்த பலியை ஏற்றுக்கொள்வதன் மூலமாக கட்டமைக்கப்பட்டுள்ளது (ரோமர் 1:5, 10:9-13, 16:26; கொலோசெயர் 2:12-15). இப்படிபட்டதான விசுவாசம் தேவன் இருக்கிறார் என்று நம்பிக்கை வைப்பது மாத்திரமல்ல , அவர் தனிப்பட்ட முறையில் நம்மைப் பற்றியும், அவரை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நமது விருப்பத்திலும் அக்கறை காட்டுகிறார் என்பதை பற்றியதாகும் . தம்மைத் தேடுபவர்களை ஆசீர்வதிக்க நம் பிதா ஆவலுடன் எப்போதும் காத்துகொண்டிருக்கிறார் . எவ்வாறாயினும், நாம் அவரைத் தேடும்போது, ​​ நித்திய, அழியாத, ஒரேமெய்யான பிதாவாகிய நம் தேவனால் அறியப்படுவதையும் நாம் அவரை அறிந்துக்கொள்வதையும் ஒப்பிடும்போது மற்ற எல்லா ஆசீர்வாதங்களும் அவைகளுக்கு முன்பாக ஒன்றுமில்லை !

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , நான் உம்மை நன்றாகவும், முழுவதுமாகவும் அறிய முயல்கிறேன். நான் உம்மையும், இயேசுவின் மூலமாய் , பரிசுத்த ஆவியியானவரின் சமூகத்தை கொண்டு அடியேனை ஆசீர்வதிக்க அநேக காரியங்களை செய்தீர் என்பதையும் நான் முழுமையாக நம்புகிறேன். தயவுக்கூர்ந்து உம்முடைய மாறாத சமூகத்தை என் வாழ்விலும், உம்முடைய திருச்சபையின் வாழ்க்கையிலும் மிகவும் பலமாய் விளங்கச் செய்தருளும் . இயேசுவின் நல்ல நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து