இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"நீங்கள் உண்மையைச் சொல்லுங்கள் , பிறகு நீங்கள் சொன்னதை நினைவில் கொள்ள வேண்டியதில்லை." இது அமெரிக்க பிரதிநிதிகள் சபையைச் சார்ந்த ஒரு புகழ்பெற்ற சபாநாயகராகிய சாம் ரேபெர்னிடம் மேற்கோள் காட்டிய வரியாகும். இந்த பதிவில் தேவனுடைய ஞானம் நமக்கு கற்பிக்க முயற்சிப்பது என்னவென்றால் உத்தமமாய் இருங்கள். பிறகு, உங்கள் இரகசியங்களை யாராவது கண்டுபிடிக்கும்போது , ​​ நீங்கள் தேவபக்தியாய் வாழ்ந்தீர்கள் என்பதை அறிந்து பாதுகாப்பாக உணரலாம். அதே , மாறுப்பாடான மற்றும் கபடமுள்ள நபராயிருந்தால் அவரை கண்டுபிடிப்பார்களோ என்று தொடர்ந்து கவலைப்பட வேண்டியிருக்கும் . கோணலும் மாறுபாடான பாதைகளில் பாதுகாப்போ, உத்தரவாதமோ இல்லை, நாம் சிக்கிப் கண்டுப்பிடிக்கப்படுவது நிச்சயம். தீமையான இரகசியங்கள் ஒரு இருண்ட அறைக்குள் முணுமுணுக்கப்பட்டாலும் அல்லது வெளிப்படையாக கூறபட்டாலும , ஆண்டவருக்காய் வாழ்கிறவர்கள் பத்திரமாய் இருக்கிறார்கள், அவர்களை குறித்து உரத்தசத்தமாய் கூறின காரியங்கள் தேவனால் சொல்லப்பட்டது "நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே ! "

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தேவனே , நான் இரகசியமாகவும் நேர்மையற்றவனாகவும் இருந்த நேரங்களுக்காக அடியேனை மன்னியும். என்னை கபடத்திலிருந்து பரிசுத்தமாக்கும். எது உண்மையோ , எது சரியானதோ அதை மட்டுமே பேச எனக்கு உதவுச்செய்யும் . என்னுடைய மறைமுகமான தீய காரியங்களை உம்முடைய பரிசுத்த கிருபையினால், மாசில்லாத தன்மையோடு பொதுவிலும், தனிப்பட்ட வாழ்விலும் இருக்கும் படி மறுரூபமாக்கும். இயேசுவின் நாமத்தினாலே வேண்டிக்கொள்ளுகிறேன், ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து