இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த வசனம் மிகாயாவின் அற்புதமான வரலாற்று சம்பவத்திலிருந்தும் , தேவனின் தீர்க்கதரிசியாக அவர் செய்த துணிச்சலிலிருந்தும் பேசப்பட்டது . இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்திலிருந்து வந்த கள்ளத் தீர்க்கதரிசிகளின் ஆலோசனையை நம்பக்கூடாது என்று யோசபாத்துக்குத் தெரியும். யூதேயாவிலுள்ள தேவனின் மக்களை யாருடனும் போரில் ஈடுபடுத்துவதற்கு முன், அவருடைய மக்கள் முதலில் கர்த்தருடைய ஆலோசனையை நாட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்! இவ்வாறே நம் வாழ்க்கையின் அணுகுமுறையும் கூட இருக்க வேண்டும். அடிக்கடி, ஜெபம், உபவாசம், மற்றும் வேதாகமத்தை வாசித்து நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தைத் தேடுவதற்கு நேரத்தை செலவிடுவதற்குப் பதிலாக, நாம் ஏற்கனவே செய்ய முடிவு செய்ததை ஆசீர்வதிக்குமாறு தேவனிடம் கேட்கிறோம். அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம். தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியினால் நம்மை வழிநடத்துவதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் (ரோமர் 8:9, 14; கலாத்தியர் 5:18, 25); எனவே, பரிசுத்த ஆவியினால் கொடுக்கப்படும் வழிநடத்துதலில் அவசரப்பட வேண்டாம், அல்லது அதைவிட மோசமாக, அதைப் புறக்கணித்துவிட்டு, எப்படியாவது எங்களை ஆசீர்வதிக்கும்படி தேவனிடம் கேட்கிறோம் !

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் சர்வவல்லமையுமுள்ள தேவனே , அனைத்து தேசங்களை ஆளுகிறவரும் , எல்லா சிருஷ்டிப்புகளின் மீதும் அதிகாரமுள்ள ஆண்டவரே, நான் உமது விருப்பத்தை நாடி, உமது மகிமையை நிலைநிறுத்தும்போது தயவுக்கூர்ந்து அடியேனின் முடிவுகளில் வழிநடத்துங்கள். எனது ஊழியத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும், குடும்பத்திலும் , வேலையிலும் மற்றும் எனது எல்லா முடிவுகளிலும் உம்முடைய சித்தத்தை எப்பொழுதும் கனம்பண்ண வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் என் சொந்த வழியையும் என் சொந்த மகிமையையும் மாத்திரமே தேடாமல், உம்முடைய வேலைக்காரரில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் உமக்கு ஊழியம் செய்ய என்னை வழிநடத்தி, ஆயத்தப்படுத்தி, ஆற்றலளிப்பதால், உம்முடைய மகிமையுள்ள வார்த்தையை ஒளிரச்செய்ய உதவுவதற்கு உம் முடைய ஆவியானவரை அனுப்பியதற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து