இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் நம்முடைய வாசஸ்தலத்திலும், இருதயத்திலும் வாசம் செய்கிறார் என்பதை எப்படி அறிந்து கொள்ளமுடியும் ? பிறருடைய வாழ்க்கையை ஆசீர்வதிக்க நாம் அன்பான காரியங்களைச் செய்யும்போது நமக்கு அது புலப்படும் ! நம்மீது தேவனின் நிலையான அன்பின் மீது நாம் நம்பிக்கைவைப்பது மற்றும் சார்ந்திருப்பது போலவே, கிறிஸ்துவுக்குள் உள்ள நம் சகோதர சகோதரிகளுக்கும் அன்பு பாராட்ட வேண்டும்!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தேவனே,சர்வவல்லமையுள்ள பிதாவே, உமது பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பியருளும் , அதனால் நான் என் குடும்பம், என் நண்பர்கள் மற்றும் என் வாழ்க்கை ஜீவியத்தில் நீர் காண்பிக்கும் மக்களுக்கு இயேசுவைப் பற்றியும் அவருடைய ஆழமான அன்பைப் பற்றியும் அறிந்துகொள்ள நான் அதிக அன்பை பகிர்ந்து கொள்ளமுடியும். என் கிருபையுள்ள இரட்சகரின் நாமத்திலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து