இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆவலுடன் காத்திருப்பது ! அந்த யோசனையை நீங்கள் விரும்பவில்லையா! முரண்பாடு உள்ள சொல் போல் இருக்கிறதா இல்லையா. மணவாளன் மணமேடையில் மணவாட்டியின் வருகைக்காக காத்திருப்பதை யோசித்துப்பாருங்கள். பெற்றோர்கள் தங்களுடைய பிறக்கப்போகிற குழந்தைக்காக காத்திருப்பதை கற்பனைசெய்து பாருங்கள். ஒரு குழந்தை தன்னுடைய பிறந்தநாளுக்காக காத்திருப்பதை நினைத்து பாருங்கள். தேவனுடைய சிருஷ்டிப்பானது அழிவு, தீங்கு, மரணம் என்பவைகளில் சிக்கிக்கொண்டதினால் ஆவலுடன் காத்திருக்கிறது ! அவருடைய சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே எதற்காக காத்துக்கொண்டிருக்கிறது? தேவ பெலன்கொண்டு மகிமையுள்ள பிள்ளையாக நாம் மறுரூபமாகி வெளிப்படவே . நமக்குரிய ஓர் உலகமும், காலங்களுமாயிருக்கும் இவை மிகவும் அற்புதமாய் தெரிகிறது.

என்னுடைய ஜெபம்

ஆண்டவரே, சர்வ சிருஷ்டிக்கும் தேவனே, எல்லா மீட்புக்கும் காரணரே என்னுடைய கண்ணீர் காய்ந்து, என் அடிமைத்தனம் அழிந்து போகும் நாளுக்காக நான் ஏங்குகிறேன். கிறிஸ்துவின் வருகையின் நாளின் போது வெளிப்படும் மகிமையின் மீதினில் என் இருதயம் நோக்கமாயிருக்க உதவியருளும். ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து