இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அன்பு என்பது ஒரு உணர்வு அல்லது அணுகுமுறையை விட அதிகம்: அன்பு ஒரு கிரியையாகும் . நாம் அன்புகூரும்போது , ​​அதை கிரியைகளின் மூலமாக வெளிப்படுத்த வேண்டும். இயேசுவானவர் நமக்கு கற்பித்த காரியங்களுக்கு கீழ்ப்படிவதன் மூலம் நம் அன்பு வெளிப்படுத்தப்பட்டு , இயேசுவிற்கு சீஷர்களாயிருக்கிறோம். உண்மையிலேயே , அந்த கீழ்ப்படிதல் நம்பமுடியாத ஆசீர்வாதத்தை கொண்டுவருகிறது - இயேசுவானவர் தமக்கு கீழ்ப்படிபவர்களுக்கு தன்னை வெளிப்படுத்துகிறார்!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தேவனே, அப்பா பிதாவே, தயவுக் கூர்ந்து என்னுடைய பாவங்களை மன்னித்தருளும். தீமையை எதிர்த்து நிற்க எனக்கு பெலனைத் தாரும். என் ஆண்டவரும் இரட்சகருமான இயேசுவின் போதனைக்குக் கீழ்ப்படிவதின் மூலம் மகிழ்ச்சியைக் காண எனக்கு உதவுங்கள்.உம் குமாரனாகிய இயேசுவின் நாமத்திலே கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து