இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்மை நாமே தேவனுக்கென்று ஒப்புக்கொடுப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, ஏனென்றால் முதலாவது நம்முடைய சொந்த விருப்பங்களுக்கு மரிக்கவேண்டும் எப்படியென்றால் கெத்செமனே தோட்டத்தில் இயேசு செய்ததைப் போல, நாமும் நம் சொந்த சிலுவையை எடுத்துக்கொண்டு, அன்புள்ள பிதாவே, என் சித்தத்தின்படியல்ல , ஆனால் உம் சித்தத்தின்படியே ஆகக்கடவது ! " என்று கூறவேண்டும்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே, இயேசு கிறிஸ்துவை எங்களுக்கு இரட்சகராக அனுப்பியதற்காக நன்றி. ஆண்டவராகிய இயேசுவே, நாங்கள் உம்மை பின்பற்ற விரும்புகிறோம். நாங்கள் அரை மனதுடனோ, மாயக்காரரைப் போலவோ உம்மை பின்பற்ற விரும்பவில்லை. உம்முடைய ஜீவன் என்னில் காணப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் . எங்கெல்லாம் என் இருதயம் தயவாய் இருக்க வேண்டுமோ அப்படிப்பட்ட இடங்களை எனக்குக் காண்பித்து , என் குணத்தை ஆவியினால் சீரமைத்துக்கொள்ள தயவுக் கூர்ந்து உதவிச் செய்யுங்கள். இதனால் நான் உம் மகிமையையும் , கிருபையையும், குணத்தையும் சுற்றியுள்ளவர்களிடம் முழுமையாக பிரதிபலிக்க முடியும். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து