இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

துன்மார்க்கன் நன்மை, பரிசுத்தம் மற்றும் நீதியின் வெற்றியைக் கண்டு பயப்படுகிறான். அவர்கள் வாழ்க்கை கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்று பயப்படுகிறார்கள். மரணம் அவர்களை மேற்கொள்கின்றது என்று பயப்படுகிறார்கள் . நீதிமான்களோ நன்மை, பரிசுத்தம் மற்றும் நீதியின் வெற்றியை விரும்புகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையை தேவனுடைய பரிசுத்த ஆவியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்படி ஒப்புவிக்கிறார்கள். மரணம் ஒரு சத்ரு என்பதை அவர்கள் அங்கீகரிக்கிறார்கள், ஆனால் இது அவர்களின் இரட்சகரால் வெல்லப்பட்ட ஒன்று. இது போன்ற நேரங்களில், துன்மார்க்கன் பயப்படும் காரியம் உண்மையிலேயே அனைத்து துன்மார்க்கர்களுக்கும் வந்து நேரிடும் என்பது ஆறுதலான விஷயம் அல்லவா!

என்னுடைய ஜெபம்

கர்த்தராகிய ஆண்டவரே, உம்மையும் உம் சித்தத்தையும் தேடும் அனைவரின் வாழ்க்கையிலும் உம் நியாயம் , இரக்கம் மற்றும் நீதியின் வெற்றியைக் தயவு கூர்ந்து கொண்டு வாருங்கள். தீங்கு மற்றும் அதை நிலைநிறுத்துபவர்கள் குறித்து அறிந்துக் கொள்ள என் இதயத்தை உம்முடைய இதயத்தைப் போல் ஆக்கி, உம்மை அறியாதவர்களை கிறிஸ்துவிடம் வழிநடத்த தயவுசெய்து, ஆழ்ந்த ஆர்வத்தை என்னுள் ஏற்படுத்தும் . இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து