இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வேத வசனம் எங்கிருந்து வந்தது? பரிசுத்த வேதாகமம் மற்றும் சுவிசேஷத்தில் நம்முடைய விசுவாசத்தின் ஆதாரம் என்ன? முற்கால தீர்க்கதரிசிகள், தேவனுடைய ஊழியகாரர்கள் , தங்கள் தீர்க்கதரிசனங்களுக்கு தங்கள் சொந்த கருத்துக்களை சொல்ல முற்படவில்லை என்பதை நாம் உணர வேண்டும் என்று அப்போஸ்தலராகிய பேதுரு விரும்புகிறார். அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அல்லது என்ன சொல்ல விரும்புகிறார்களோ அதை அல்லாமல், தேவன் தங்களைக் கொண்டு என்ன நடப்பிக்கிறார் என்பதை மாத்திரமே அவர்களால் செய்யவும், சொல்லவும் முடிந்தது . அவர்கள் மனிதர்கள், ஆனால் அவர்களின் செய்திகள் தேவனுடைய வார்த்தையாக இருந்தன, ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் அவர்களை ஆட்கொண்டு இன்னதை சொல்ல வேண்டுமென்று மற்றும் அவர்கள் கூறிய வார்த்தையின் பிரகாரமாக அவர்களை வழிநடத்தினார் . தீர்க்கதரிசிகளின் மூலமாய் பெற்ற பரிசுத்த வேதத்தில் எழுத்துக்களாக உள்ள வார்த்தையானது விலையேறப்பெற்ற அநேக காரியங்களை விட அதிக மேன்மையானது. தேவனுடைய வார்த்தைகள் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன! (2 தீமோத்தேயு 3:16-17)

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , உம் ஆச்சரியமான செய்தியை பொதுவான, அன்றாட மொழியில் எங்களுக்கு வழங்க சாதாரண மக்களை ஊக்கப்படுத்தியதற்காக உமக்கு நன்றி. உம்முடைய தீர்க்கதரிசிகள் மூலம் உம் இன்றியமையாத செய்திகளை வேதாகமத்தில் எங்களுக்கு வழங்கியதற்காக நன்றி. உபத்திரவம் , கஷ்டம் மற்றும் எதிர்ப்பு ஆகியவற்றின் மூலம் உம்முடைய சத்தியத்தை பாதுகாத்ததற்காக நன்றி. தயவு செய்து அதே பரிசுத்த வேதாகமத்தை என் இருதயத்திலும், உம் சிருஷ்டிப்பிலும் எங்கள் நாளில் ஒரு புதிய எழுப்புதலைத் தாரும். இயேசுவின்நல்ல நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து