இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நிச்சயமற்ற உலகத்திலே தேவனுடைய வார்த்தை நமது இருண்ட பாதைக்கு வெளிச்சமாயிருக்கிறது. தேவனுடைய வார்த்தையைக் கொண்டு எது சரி, எது தவறு , எது நீதி , எது தீமை என்று ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியும் . நாம் தேவனுடைய சித்தத்தையும் , வார்த்தையையும் நம் வாழ்வில் கொண்டிருப்பதால் , நம் வாழ்க்கையை சீர்குலைக்கக்கூடிய அனைத்து வகையான அழிந்து போகக் கூடிய நடைமுறைகளிலிருந்தும் நாம் விடுவிக்கப்படுகிறோம்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையும், உன்னதமுமான தேவனே, மரித்தோரை எழுப்பி, விழுந்தவர்களை மீட்டெடுப்பவரே, உம்முடைய சத்தியத்திலே என் இருதயம் மகிழும்படியாகவும், உம் சித்தத்திற்கு ஏற்ப அதிக இணக்கமாக என் வாழ்க்கை அமையும்படியாகவும் செய்யும் . உம் வழியிலே என்னை வழிநடத்தி, என் காலடிகளை நீதியிலே வழி நடத்துங்கள். சாத்தான் என்னையும், என் ஆவிக்குரிய வாழ்க்கையையும் கெடுக்கும்படி செய்யும் எல்லா விதமான அடிமைத்தனங்களிலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்ள எனக்கு பெலன் அளியுங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து